Thursday, October 13, 2016

எல்.சி. யில் பையர்ஸ் கிரிடிட் என்றால் என்ன?

 
திருநாவுக்கரசு
திருப்பூர்
 
 
கேள்வி
 
எல்.சி. யில் பையர்ஸ் கிரிடிட் என்றால் என்ன?
 
பதில்
 
நீங்கள் வெளிநாட்டில் உள்ள ஒருவரிடம் சரக்குகளை வாங்க ஒப்பந்தம் போடுகிறீர்கள். அவர் சைட் எல்.சி. கேட்கிறார். அதாவது சரக்குகளை வாங்கியதற்கான பணத்தை உடனடியாக கொடுக்க வேண்டும் என்பது தான் சைட் எல்.சி. எனப்படும்.

ஆனால் நீங்கள் அந்த சரக்குகளை வாங்கி, அதன் மூலம் பொருட்களை தயாரித்து, அவற்றை விற்று உங்களுக்கு பணம் வருவதற்கு சுமார் 180 நாட்கள் ஆகும் என்றால் நீங்கள் உங்கள் வங்கியில் சென்று பையர்ஸ் கிரிடிட் அரேஞ்ச் பண்ணித்தாருங்கள் என்று கூறினால் அவர்கள் அவர்கள் வங்கியின் வெளிநாட்டு கிளை மூலமாகவோ அல்லது வேறு ஏதாவது வங்கியின் வெளிநாட்டு கிளை மூலமாகவோ உங்களுக்கு 180 நாட்கள் கழித்து நீங்கள் அந்த எல்.சி.க்கு பணம் கொடுக்குமாறு கடன் ஏற்பாடு செய்வார்கள். இந்த கடன் வெளிநாட்டு பணத்தில் இருப்பதனால் வட்டி விகிதங்களும் மிகவும் குறைவாக இருக்கும். எல்.சி.க்கு பணம் கொடுக்க வேண்டிய தேதியில் அதாவது சைட்டில் அந்த வங்கி அளித்து விட்டு உங்களிடம் 180 நாட்கள் கழித்து லைபர் ப்ள்ஸ் மார்ஜின் சேர்த்த வட்டியுடன் உங்களிடம் வாங்கிக் கொள்ளும்.

உங்களுக்கு உள்ள ரிஸ்க் அந்த 180 நாட்களில் டாலருக்கு எதிராக ரூபாய் மிகவும் குறைந்தால் நீங்கள் உங்கள் இம்போர்ட்டிற்கு 180 வது நாளில் அதிகம் ரூபாய் கட்ட வேண்டியிருக்கும். இதையும் பார்வர்ட் காண்டிராக்ட் மூலமாக சரி செய்யலாம்.
இந்திய ரூபாயில் இந்திய வங்கியில் கடன் வாங்குவதை விட இது உங்களுக்கு சிறிது லாபம் தரும். ஆனால், பாரின் எக்ஸ்சேஞ்சில் இருக்கும் லாப, நஷ்டங்கள் இதிலும் இருக்கிறது. எல்.சி. இல்லாத டாக்குமெண்ட்களிலும் (கலெக்ஷன் டாக்குமெண்ட்ஸ், டைரக்ட் டாக்குமெண்ட்ஸ் போன்றவை) பையர்ஸ் கிரிடிட் வாங்கலாம்.

Tuesday, October 11, 2016

எல்.சி. மூலமாக ஏற்றுமதிக்கு இன்வாய்ஸ் தயாரிக்கும் போது அதில் கையெழுத்து இடுவது கட்டாயமா?

ராமன், திருப்பூர்

கேள்வி:
எல்.சி. மூலமாக ஏற்றுமதிக்கு இன்வாய்ஸ் தயாரிக்கும் போது அதில் கையெழுத்து இடுவது கட்டாயமா?

பதில்:
யூ.சி.பி. ரூல் 18ன் படி, எல்.சி.யில் கூறப்பட்டிருந்தால் ஒழிய, இன்வாய்ஸ் கையெழுத்திடப்பட்டிருக்க வேண்டாம்.

எல்.சி. டாக்குமெண்டில் நெகோஷியேஷன் என்றால் என்ன?

ஸ்டார் எக்ஸ்போர்ட்ஸ், மதுரை

கேள்வி:
எல்.சி. டாக்குமெண்டில் நெகோஷியேஷன் என்றால் என்ன?

பதில்:
நீங்கள் எல்.சி. மூலம் சமர்பிக்கும் ஏற்றுமதி டாக்குமெண்ட்களை வங்கி சரிபார்த்து அதற்கான பணத்தை அதன் முடிவு தேதிக்கு ஒரு நாளைக்கு முன்பு அதற்கான பணத்தை கொடுப்பது (எந்த வங்கி எல்.சி. ஒப்பன் செய்துள்ளதோ அந்த வங்கியிடம் இருந்து பணம் வந்தவுடன் கொடுப்போம் என்று சொல்வது நெகோஷியேஷன் அல்ல).

இது போல கொடுக்க வங்கி உங்களிடம் ஒத்துக் கொண்டிருக்க வேண்டும். அதாவது நெகோஷியேஷன் செய்ய.  எல்.சி. யில் அந்த வங்கி நெகோஷியடிங் வங்கியாகவோ அல்லது கன்பர்மிங் வங்கியாகவோ இருக்க வேண்டும்.




Saturday, October 8, 2016

www.sethuramansathappan.blogspot.com

இந்த ப்ளாக் உங்களுக்கு எல்.சி. மூலமாக செய்யப்படும் ஏற்றுமதி டாக்குமெண்டேஷனில் இருக்கும் சந்தேகங்களை போக்குவதற்கு உபயோகமாக இருக்கும்.

ஏற்றுமதியை பற்றி தெரிந்து கொள்ள www.sethuramansathappan.blogspot.com என்ற இனையதளத்தை தொடர்ந்து பார்த்து வாருங்கள்.


இன்ஸ்டால்மெண்ட் ஏற்றுமதி


கேள்வி
எல்.சி. படி எங்களது கம்பெனி சரக்குகளை மூன்று இன்ஸ்டால்மென்டில் அனுப்ப வேண்டும். முதல் இன்ஸ்டால்மெண்ட் சரியான தேதியில் ஏற்றியனுப்ப பட்டது. இரண்டாவது இன்ஸ்டால்மெண்ட்  குறித்த தேதிக்குள் அனுப்ப இயலவில்லை. சிறிது தாமதமாகிவிட்டது. மூன்றாவது இன்ஸ்டால்மெண்ட் அனுப்ப முடியுமா?

பதில்

யூ.சி.பி.டி.சி. விதிகளின் படி ஒரு இன்ஸ்டால்மெண்ட் அனுப்ப தாமதமாகிவிட்டால் அதற்கு பிறகு உள்ள இன்ஸ்டால்மெண்ட்களை அனுப்ப இயலாது. நீங்கள் அப்படி மூன்றாவது இன்ஸ்டால்மெண்ட் அனுப்ப வேண்டுமென்றால், அதற்கான அமெண்ட்மெண்ட் வாங்கித்தான் அனுப்ப முடியும். இல்லாவிடில் இது டிஸ்கிரிபன்சி ஆகும்.



எல்.சி. படி அலுவலக முகவரி டாக்குமெண்டேஷனில் இருக்க வேண்டுமா?


கேள்வி

எங்களுக்கு வந்திருக்கிற எல்.சி.யில் எங்களது டெல்லி தலைமை அலுவலக முகவரி உள்ளது. ஆனால் ஏற்றுமதி திருப்பூரில் இருந்து நடைபெறவுள்ளது. இன்வாய்ஸில் திருப்பூர் முகவரி போடப்பட்டால் அது தவறா?


பதில்

நல்ல கேள்வி. எல்.சி.யில் இருக்கும் முகவரியும், இன்வாய்ஸில் இருக்கும் முகவரியும் வேறாக இருக்கலாம். ஆனால், அந்த இந்தியாவிற்குள் இருக்க வேண்டும். இது எல்.சி. படி தவறாக எடுத்துக் கொள்ளப்படாது.