Thursday, October 13, 2016

எல்.சி. யில் பையர்ஸ் கிரிடிட் என்றால் என்ன?

 
திருநாவுக்கரசு
திருப்பூர்
 
 
கேள்வி
 
எல்.சி. யில் பையர்ஸ் கிரிடிட் என்றால் என்ன?
 
பதில்
 
நீங்கள் வெளிநாட்டில் உள்ள ஒருவரிடம் சரக்குகளை வாங்க ஒப்பந்தம் போடுகிறீர்கள். அவர் சைட் எல்.சி. கேட்கிறார். அதாவது சரக்குகளை வாங்கியதற்கான பணத்தை உடனடியாக கொடுக்க வேண்டும் என்பது தான் சைட் எல்.சி. எனப்படும்.

ஆனால் நீங்கள் அந்த சரக்குகளை வாங்கி, அதன் மூலம் பொருட்களை தயாரித்து, அவற்றை விற்று உங்களுக்கு பணம் வருவதற்கு சுமார் 180 நாட்கள் ஆகும் என்றால் நீங்கள் உங்கள் வங்கியில் சென்று பையர்ஸ் கிரிடிட் அரேஞ்ச் பண்ணித்தாருங்கள் என்று கூறினால் அவர்கள் அவர்கள் வங்கியின் வெளிநாட்டு கிளை மூலமாகவோ அல்லது வேறு ஏதாவது வங்கியின் வெளிநாட்டு கிளை மூலமாகவோ உங்களுக்கு 180 நாட்கள் கழித்து நீங்கள் அந்த எல்.சி.க்கு பணம் கொடுக்குமாறு கடன் ஏற்பாடு செய்வார்கள். இந்த கடன் வெளிநாட்டு பணத்தில் இருப்பதனால் வட்டி விகிதங்களும் மிகவும் குறைவாக இருக்கும். எல்.சி.க்கு பணம் கொடுக்க வேண்டிய தேதியில் அதாவது சைட்டில் அந்த வங்கி அளித்து விட்டு உங்களிடம் 180 நாட்கள் கழித்து லைபர் ப்ள்ஸ் மார்ஜின் சேர்த்த வட்டியுடன் உங்களிடம் வாங்கிக் கொள்ளும்.

உங்களுக்கு உள்ள ரிஸ்க் அந்த 180 நாட்களில் டாலருக்கு எதிராக ரூபாய் மிகவும் குறைந்தால் நீங்கள் உங்கள் இம்போர்ட்டிற்கு 180 வது நாளில் அதிகம் ரூபாய் கட்ட வேண்டியிருக்கும். இதையும் பார்வர்ட் காண்டிராக்ட் மூலமாக சரி செய்யலாம்.
இந்திய ரூபாயில் இந்திய வங்கியில் கடன் வாங்குவதை விட இது உங்களுக்கு சிறிது லாபம் தரும். ஆனால், பாரின் எக்ஸ்சேஞ்சில் இருக்கும் லாப, நஷ்டங்கள் இதிலும் இருக்கிறது. எல்.சி. இல்லாத டாக்குமெண்ட்களிலும் (கலெக்ஷன் டாக்குமெண்ட்ஸ், டைரக்ட் டாக்குமெண்ட்ஸ் போன்றவை) பையர்ஸ் கிரிடிட் வாங்கலாம்.

No comments:

Post a Comment